Jyothika : அஜித்தின் வாலி படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. முதல் படத்தில் தனது திறமையையும், அழகையும் காட்டி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஜோதிகாவுக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, ரஜினி, கமல் என டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணி..
தன்னுடைய மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார் நல்ல எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சில வருடங்கள் சினமாவில் தென்படாமல் இருந்த ஜோதிகா மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்து.
சூர்யாவுக்கு தான் முதல் வாய்ப்பு.. வரலன்னா கம்பெனி நாயகனை வைத்து வாடிவாசல் எடுப்பேன் – வெற்றிமாறன்
வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2d என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். சின்ன படங்களை தயாரித்து பெரிய வெற்றியை கண்டு வருகிறது இந்த ஜோடி.
சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் நடிகர், நடிகைகள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து நாம் பார்த்து வருகிறோம் அதேபோல நடிகை ஜோதிகா தமிழ் திரை உலகில் 10 வருடங்கள் சினிமாவில் நடித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ஜோதிகா தற்பொழுது ஒரு படத்திற்கு சுமார் 5 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் அவருக்கு 2000 சதுர அடிக்கு பங்களா இருக்கிறது மும்பையில் 70 கோடிக்கு அப்பார்ட்மெண்ட் வாங்கி இருக்கிறார்.
ஜோதிகாவிடம் சொந்தமாக bmw, ரேஞ்ச் ரோவர், ஆடி என பல சொகுசு கார்கள் இருக்கின்றன ஜோதிகாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 330 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களுக்கு நிகராக ஜோதிகா சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.