சூட்டிங் ஸ்பாட்டில் மாஸ் காட்டிய நடிகை ஜோதிகா..! கையடுத்து கும்பிட்டு போன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

rajini
rajini

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்கள் தான். அந்த வகையில் கடந்த 2005 ஆண்டு பி வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி.

இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து பிரபு, ஜோதிகா, வடிவேலு, நாசர், நயன்தாரா, விஜயகுமார் என மிகப் பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது இந்த படத்தில் பலரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது குறிப்பாக நடிகை ஜோதிகாவின் மாறுபட்ட நடிப்பு பலரையும் வியக்க வைத்தது என்று கூறலாம்.

இந்த படம் அப்பொழுது வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது மேலும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது. இந்த படம் இப்பொழுது கூட பலருக்கும் பிடித்த ஒரு ஃபேவரைட் திரைப்படமாக சந்திரமுகி படம் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் சந்திரமுகி படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில்  நடந்த சில விஷயங்களை நடிகர் பிரபு சமீபத்தில் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.

பிரபு ப்ரொடக்ஷனில் தான் சந்திரமுகி படம் தயாரிக்கப்பட்டது அப்பொழுதே நான் சொன்னேன் இது முழுக்க முழுக்க ரஜினி படமாக இருக்கும் என்று அதேபோல உருவானது இந்த படம் இப்பொழுதும் பலருக்கும் பிடித்துள்ளது இந்த படம் இப்பொழுது பார்த்தாலும் சலிக்காது என கூறினார் மேலும் பேசிய அவர் நானும், ரஜினியும்..

அதிகாலை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போகும் போது எங்களுக்கு முன்னாடியே நடிகை ஜோதிகா தயாராக இருப்பார் ஜோதிகாவை பார்த்ததும் ரஜினி ஐயோ சாரிமா லேட்டாகிடுச்சு எனக் கூறி கை எடுத்து கும்பிட்டு ரஜினி போவாராம் இதனை நடிகர் பிரபு வெளிப்படையாக கூறினார். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது