Vijay-Jyothika: நடிகை ஜோதிகா ஒரே காரணத்துக்காக விஜய் உடன் இரண்டு திரைப்படங்களை நடிக்க நோ சொல்லி உள்ளார் இது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். எனவே விஜய் திரிஷா கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார்.
இவ்வாறு தளபதி 68 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தளபதி 68 மட்டுமல்லாமல் ஒரே காரணத்திற்காக இன்னொரு விஜய்யின் படத்திலும் நடிக்க ஜோதிகா மறுத்துள்ளார். தளபதி 68 படத்தினை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் பல கோடி பட்ஜெட்டில் உருவாக்க இருப்பதினால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
இந்த படத்தின் ஷுட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது மேலும் இந்த படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இவரைத் தொடர்ந்து பிரபுதேவா, மாதவன், பிரியா மோகன் ஆகியோர்களும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் முக்கியமாக விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க முயற்சி செய்தார்கள். குஷி, திருமலை போன்ற படங்களில் இணைந்து நடித்த பிறகு இவர்கள் எந்த படங்களிலும் இணையவில்லை.
ஆனால் அட்லீ இயக்கிய மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் தான் முதலில் பேச்சு வார்த்தை நடைபெற்றதாம் ஆனால் அதற்கு ஜோதிகா மறுத்துவிட்டாராம் அப்பொழுது சொன்ன காரணத்தை தான் தற்பொழுதும் கூறிய உள்ளாராம். அதாவது, மெர்சல் படத்தில் அப்பா விஜய் கேரக்டருக்கு ஜோடியாக நடிக்க தான் ஜோதிகாவிடம் கேட்கப்பட்டதாம் அதன்படி மகன் விஜய்க்கு ஜோதிகா அம்மாவாக நடிக்க வேண்டும் அம்மாவாக நடிப்பதில் பிரச்சனை இல்லை ஆனால் விஜய்க்கு அம்மாவாக நடிக்க முடியாது என ஜோதிகா மறுத்துள்ளார்.
இப்பொழுது தளபதி 68 படத்திலும் அப்பா விஜய் கேரக்டருக்கு ஜோடியாக ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம் எனவே தனது கேரக்டர் குறித்து தெரிந்தவுடன் தளபதி 68லிருந்து விலகியுள்ளார் ஜோதிகா.