திமிராகப் பேசிய ஜோதிகா.! பதறி அடித்து போய் பதில் சொன்ன விஜய் சேதுபதி.!

jyothika-tamil360newz
jyothika-tamil360newz

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நடிகை ஜோதிகா ‘பிரகதீஸ்வரர்’ ஆலயம் மிகவும் புகழ் பெற்றது, மிகவும் அழகாக இருக்கும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார்கள் நான் ஏற்கனவே பார்த்துள்ளேன், அது மிகவும் அழகாக இருக்கிறது என கூறினார்.

மேலும் அவர் உதய்பூரில் உள்ள அரண்மனைகள் மாதிரி மிகவும் நன்றாக பராமரித்து வருகிறார்கள், அடுத்த நாள் என்னுடைய படப்பிடிப்பு மருத்துவமனையில் நடைபெற்றது அது சரியாக பராமரிக்கப் படாமல் இருந்தது நான் கண்டதை என் வாயால் கூறமுடியவில்லை எல்லோருக்கும் ஒரு கோரிக்கை.

கோயில்களுக்கு அதிக காசு கொடுக்கிறார்கள் வண்ணம் பூசி பராமரிக்கிறார்கள் தயவுசெய்து அதே தொகையை பள்ளிக்கு மருத்துவமனைக்கும் கொடுங்கள் இது மிகவும் முக்கியமான ஒன்று ஆகிவிட்டது, நான் அந்த மருத்துவமனையை பார்த்த பிறகு அந்த கோவிலுக்கு போகவில்லை மருத்துவமனையும், பள்ளிகளும் மிகவும் முக்கியம் எனவே அவற்றுக்கு நிதி உதவி செய்வோம் என கூறினார்.

இவரின் இந்த கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், இந்தநிலையில் ஜோதிகா அவர்கள் கூறியதை வைத்து ஜோதிகா அவர்கள் மருத்துவமனைக்கு சென்றது படம் எடுப்பதற்காக அப்படி என்றால் மருத்துவமனையின் நிலைமையை பார்த்த பிறகு நான் இனிமேல் படம் எடுக்கவில்லை என்று படத்திற்கான செலவை அந்த மருத்துவமனைக்கு பராமரிப்பதற்காக கொடுத்திருக்கலாம் என கேள்வி எழுப்புகிறார்கள்.?

அதுமட்டுமில்லாமல் சினிமா என்ற ஒரு பொழுதுபோக்கு விஷயத்திற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறீர்கள் அந்த காசை மருத்துவமனை மற்றும் பள்ளிக்காக நன்கொடையாக கொடுத்தால் பிரச்சினையே இல்லையே என கேள்வி எழுப்புகிறார்கள்?.

vijaysethupathi-tamil360newz
vijaysethupathi-tamil360newz

மருத்துவமனைக்கு சென்று அதுமட்டுமல்லாமல் அது பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் நான் கோவிலுக்கு செல்ல வில்லை என்று கூறுவது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று அதனால் பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள் இதனால் நடிகர் விஜய் சேதுபதியை ஜோதிகாவுக்காக ஆதரவான பேசியது போல் ஒரு புகைப்படம் தீயாய் பரவ ஆரம்பித்தது.

இதைப்பார்த்து பதறிப்போய் விஜய்சேதுபதி மக்களின் எதிர்ப்பை புரிந்துகொண்டு விஜய்சேதுபதி நான் அப்படி கூறவே இல்லை இது போலியான புகைப்படம் என உடனே விளக்கம் கொடுத்துள்ளார் விஜய்சேதுபதி.