எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வாலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஜோதிகா. முதல் படத்திலேயே இவருடைய அழகு மற்றும் திறமை பெரிய அளவில் பேசப்பட்டது அதைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தாலும் நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்தார்.
அந்த வகையில் குஷி, முகவரி, பூவெல்லாம் கேட்டுப்பார் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்தால் இவருடைய மார்க்கெட் அசுர வளர்ச்சியை எட்டியது. இதனால் வருடத்தில் குறைந்தது நான்கு, ஐந்து படங்கள் நடித்து வாழ்ந்தார். இந்த நிலையில் சந்திரமுகி திரைப்படத்தில் இவருடைய நடிப்பு திறமை முழுவதையும் வெளிக்காட்டி தான் ஒரு சிறந்த நடிகையின் பலருக்கும் புரிய வைத்தார்.
அதன் பிறகு இவர் பெரிய அளவில் படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நீண்ட வருடமாக சூர்யாவை காதலித்து வந்த ஜோதிகா திடீரென திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு குடும்ப பொறுப்பில் இறங்கினார் இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். குடும்பத்தை கவனித்து வந்த ஜோதிகாவுக்கு மீண்டும் பட வாய்ப்பு கதவை தட்டியது அதன்படி 2015 ஆம் ஆண்டு 36 வயதினிலே படத்தில் நடித்த அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து ராட்சசி, தம்பி, உடன்பிறப்பே போன்ற படங்கள் வரவேற்பை பெற்றது இப்பொழுது கூட நல்ல படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஓடிக் கொண்டிருக்கும் நடிகை ஜோதிகா விஜய்யின் சூப்பர் ஹிட் படத்தை தவற விட்டு உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. 2017 ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க நித்யா மேனனுக்கு முன்பு ஜோதிகாவை நடிக்க இயக்குனர் அட்லி திட்டம் போட்டு இருந்தார்.
ஜோதிகாவுக்கு அட்லி கதை சொன்னார் அதை கேட்டு விட்டு சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கிறார் ஆனால் அட்லீ அதை மாற்ற முடியாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறி விட கடுப்பான ஜோதிகா இதெல்லாம் சரிப்பட்டு வராது எனக் கூறி விஜய் இடம் சொல்லாமலேயே அங்கிருந்து கிளம்பி விட்டாராம். விஜயோ நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஜோதிகாவுடன் நடிக்கப் போகிறார் என்ற சந்தேகத்தில் இருந்து உள்ளார் ஆனால் அவரிடமே சொல்லாமல் ஜோதிகா கிளம்பியது விஜய்க்கு ரொம்பவும் வருத்தத்தை கொடுத்ததாம்.