சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீமதி என்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவி பள்ளியில் தற்கொலை செய்து கொண்டார் ஆனால் அந்த மாணவியின் குடும்பம் இதில் மர்மங்கள் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்துள்ளனர். பின் உடல் பரிசோதனை செய்ய அனுமதிக்க பட்டது. இடையில் இது மிகப்பெரிய ஒரு போராட்டமாக மாறி பள்ளி நிர்வாகத்தை முற்றுகையிட்டு மக்கள் அனைவரும் அடித்து நொறுக்கினர்.
அந்த இடமே போராட்டக் களமாக மாறியது. மக்கள் அந்த மாணவியின் மரணத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என தனது ஆதரவை சோசியல் மீடியா தொடங்கி அந்த பள்ளிகளையை சுற்றி தற்பொழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர் தமிழக அரசு இந்த விஷயத்தில் தீவிரமாக தலையிட்டு உள்ளது.
மேலும் சிபிசிஐடி விசாரணைக்கு உட்பட வேண்டுமென கோரிக்கையையும் கொடுக்கப்பட்டுள்ளதாம். இறந்து போன ஸ்ரீமதி என்கின்ற மாணவிக்கு தற்போது பொதுமக்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. ஆனால் சினிமா பிரபலங்கள் யாரும் சொல்லி கொள்ளும்படி ஆதரவு கொடுக்காமல் இருக்கின்றனர் ஒரு மாணவி இறந்து அந்த செய்தி பெரிய அளவில் வெடித்துள்ளது. எந்த ஒரு நடிகர்களும் இந்த பிரச்சனைக்கு குரல் கொடுக்கவே இல்லை.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு, நீட் தேர்வு, பொள்ளாச்சி சம்பவம் போன்றவற்றிற்கு வாய் திறந்த சூர்யா, கார்த்தி, விஜய், ஜி.வி பிரகாஷ் போன்றவர்கள் இப்படி ஒரு மரண சம்பவதிற்கு எந்த ஒரு ஆதரவுமே கொடுக்காமல் அவரவர் அவரது வேலையை பார்த்து வருகின்றனர்.
இந்த பிரச்சனைக்கு முதல் ஆளாக குரல் கொடுத்தவர் உலக நாயகன் கமலஹாசன் மட்டும் தான். மற்ற எந்த ஒரு பிரபலமும் இந்த விஷயத்திற்கு ஒரு பதிவு கூட போடவில்லை குரலும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் தனக்கு பிடித்தமான நடிகர்கள் மீது கடுப்பில் இருக்கின்றனர்.