சூர்யா படத்தின் வசூலை முக்கிய இடத்தில் முந்திய தனுஷின் திருச்சிற்றம்பலம்.! அதுவும் 3 நாளிலேயே..

surya-and-dhanush
surya-and-dhanush

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா உலகில் பல வெற்றி படங்களை கொடுத்து இருந்தாலும் இவர் கடைசியாக நடித்த ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் தோல்வியை தழுவின இருப்பினும் தனுஷ் அதை ஒரு பெரிய விஷயமாக எடுத்து கொள்ளாமல் அடுத்தடுத்த சிறந்த இயக்குனர்களிடம் நன்கு கதையை கேட்டு ஒப்பந்தமாகி நடிக்க ஆரம்பித்தார்.

அந்த வகையில் இப்பொழுது மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான திருச்சிற்றம்பலம் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகியது. இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர், பாரதிராஜா போன்ற பலரும் நடித்துள்ளனர். படம் சிறப்பாக இருக்கின்ற காரணத்தினால் ரசிகர்களும் மக்களும் படத்தை பார்த்து வருகின்றனர்.

இதனால் திரையரங்குகள் அனைத்தும் ஹவுஸ் புல் ஆக இருகின்றனர் மேலும் வசூல் ரீதியாகவும் அதிக பணத்தை ஈட்டி ஓடிக்கொண்டிருக்கிறது. மூன்று நாட்களில் மட்டுமே உலக அளவில் 32 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளி வருகின்றன இதனால் படக்குழுவும் சரி தனுஷும் சரி செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

மேலும் வருகின்ற நாட்களிலும் பெரிய படங்கள் எதுவும் வெளிவர இல்லாததால் தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படம் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என கணிக்கப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் தமிழ்நாட்டையும் தாண்டி மற்ற இடங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் USA வில் $200K டாலருக்கு மேல் அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது வெறும் மூன்று நாட்களில் மட்டுமே சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் வசூலை முந்தி உள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களில் இன்னும் பல்வேறு டாப் நடிகர்களின் படத்தின் வசூல் சாதனையை தனுஷின் திருச்சிற்றம்பலம் படம் முறியடிக்கும் என சொல்லப்படுகிறது.