தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை மாளவிகா மோகனன் இவ்வாறு பிரபலமான நடிகை சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமூகவலைத்தள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் ரசிகர்களின் ஆதரவை எளிதில் பெற வழி வகுத்தது.
இந்நிலையில் மாளவிகா மோகன் மியூசிக் வீடியோ ஒன்றில் நடித்துள்ளார் அந்த வகையில் படு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு அவர் மியூசிக் வீடியோ செய்த வீடியோவானது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரலாக பரவியது மட்டுமில்லாமல் மூன்று மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
பொதுவாக தங்களுடைய ரசிகர்களை சிதறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்தினால் சமூகவலைத்தள பக்கத்தில் அவரது ரசிகர்களிடம் நேரடி உரையாடல் வைத்துக்கொள்வது நடிகைகளுக்கு ஒரு பழக்கமான செயலாக மாறியுள்ளது. அந்தவகையில் இந்த சந்தர்பத்தை சில ரசிகர்கள் மிகவும் தவறாக பயன்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ரசிகர் ஒருவர் மாளவிகா மோகனன் நேரடி உரையாடலின்போது ஐ லவ் யூ மட்டும் சொல்லுங்கள் அப்படியே பிரேம் போட்டு பெட்ரூமில் மாட்டிக் கொள்வேன் என்று கூரியிருந்தார். இவ்வாறு ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க நடிகை மாளவிகா மோகனன் உடனே ஐ லவ் யூ என சொல்லியிருந்தார்.
பொதுவாக வேறு ஒரு நடிகையாக இருந்தால் இதுபோன்ற செயலில் ஈடுபட மாட்டார்கள் ஆனால் மாளவிகா பெருந்தன்மையுடன் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றியது பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.