இந்த படத்தின் பெயரை போட்டு தான்.! ஆட்டோக்ராப் போடுவார் தளபதி விஜய்.!

தற்போது பிரபல முன்னணி  நடிகராக திரையுலகில் வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய். இவர் தொடக்கத்தில் தனது தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்களில் நடித்து வந்தார் ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகுதான் திரையுலகில்  தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் போன்ற பல நாடுகளிலும் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திரை உலகில் கொடிகட்டி பறந்து வருகிறார். இவர் முதலில் வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது பத்து வயதில் அறிமுகமானார்.

இவர் ஏறத்தாழ 62 படங்கள் நடித்துள்ளார். தற்போது மக்கள் மனதில் தீரா இடம்பிடித்துள்ளார்.தளபதி விஜய் 1998ஆம் ஆண்டில் நடித்த படம் பிரியமுடன் இப்படத்தில் வின்சென்ட் செல்வா இயக்கி இருப்பார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கௌசல்யா நடித்திருப்பார்.

இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இப்படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆகிவிட்ட இந்நிலையில் விஜய் எங்கு தனது ஆட்டோகிராப் போட்டாலும் பிரியமுடன் விஜய் என தான் ஆட்டோகிராப் போடுவாராம்.

Leave a Comment

Exit mobile version