ஒரே ஒரு வீடியோ கால் தான் மொத்த ரகசியமும் போச்சு..! தளபதி 67 ல் விக்ரம் நடிகரா..?

lokesh-111

தமிழ் திரை உலகில் தற்பொழுது நம்பர் ஒன் இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகமானார் இதனை தொடர்ந்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறு இந்த இரண்டு திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றதன் காரணமாக தற்போது பல்வேறு முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார் என்றே சொல்லலாம். அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய் வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி பகத் பாஸில் சூர்யா போன்ற பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்தது மட்டும் இல்லாமல் இவர்களின் நடிப்பு மிகவும் பெருமையாக பேசப்பட்டது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பகத் பாஸில் நடித்த அமர் என்ற கதாபாத்திரம்  ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம் அந்த வகையில் மீண்டும் அவர் லோகேஷ் கனகராஜன் சினிமா உலகில் இடம் பெறுவார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் தற்பொழுது பகத் பாஸில் அவர்கள்  மலையாளத்தில் மலையன் குஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென லோகேஷ் கனகராஜ் அவர்கள் வீடியோ கால் செய்துள்ளார் அப்பொழுது லோகேஷ் இடம் பேசிய தொகுப்பாளர் நீங்கள் எப்பொழுது மறுபடியும் இனைவீர்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில் நாங்கள் அடுத்த திரைப்படத்தில் ஒன்றாக இணைவோம் என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கம் திரைப்படம் என்றால் அது தளபதியின் 67 வது திரைப்படம் தான் ஆகையால் இந்த திரைப்படத்தில் பகத் பாஸில் கதாபாத்திரம் இருக்கும் என பலரும் கொண்டாட்டத்தில் உள்ளார்கள்.

loki
loki