சினிமா உலகில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இருக்கும் ஒரே ஆசை நம்பர் ஒன் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து நம்பர் ஒன் இடத்தை பிடித்து ஆட்சி செய்து வருகிறார். அவரை பின் தொடர்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா.
அண்மைக்காலமாக எந்த மாதிரியான கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் இறங்கி நடிப்பதால் இவருடைய வரவேற்பு தற்போது அதிகரித்துள்ளது. சினிமா பிரபலங்களே பலர் சொல்லி உள்ளனர். நயன்தாராவை வெகு விரைவில் சமந்தா ஓவர் டெக் செய்து விடுவார் என்று அதற்கேற்றார் போல தற்போது நடக்கும் செயல்களும் அப்படித்தான் இருக்கிறது.
சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த படம் காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர்கள் நடித்திருந்தனர். முதல் முறையாக சமந்தாவும் நயன்தாராவும் ஒரே படத்தில் இணைந்து நடித்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.
படம் ஒரு வழியாக திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது இந்த படத்தில் நயன்தாரா கண்மணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா கதிஜா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த இரண்டு கதாபாத்திரங்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது கஜிதா கதாபாத்திரம் தான் என கூறப்படுகிறது அப்போதே உணர்ந்து விட்டார் நயன்தாரா.
மேலும் சமந்தா நயன்தாராவை முந்திவிட்டார் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் பேசப்பட்டது அதற்கு ஏற்றார் போல தற்போது பட வாய்ப்புகளும் நயன்தாராவை விட சமந்தாவுக்கு தான் அதிகம் கிடைக்கின்றன. இதை உணர்ந்த நயன்தாரா தெரியாமல் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்தது தனக்கே பாதகமாக இப்பொழுது அமைந்து விட்டது எனக் கூறி புலம்பி வருகிறாராம்.