நடிக்கிற வேலையை மட்டும் பார்த்தா போதும்.! விஜய்க்கு டோஸ் விட்ட தளபதி-66 தயாரிப்பு நிறுவனம்.!

vijay
vijay

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நடிகர் விஜய்க்கு பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி வெளியாகிறது இந்தப் படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது அதனால் எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை மேலும் பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் திலிப்குமர் தான் இயக்கியுள்ளார் சன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தது.

பீஸ்ட் திரைப் படத்திற்கு போட்டியாக கேஜிஎப் திரைப்படம் களமிறங்கியது அதனால்தான் பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை நெருங்க முடியவில்லை. ஆனாலும் விஜய் கெத்தாக பின்வாங்காமல் படத்தை வெளியிட்டது ரசிகர்களிடையே  மகிழ்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் விஜய் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தை தெலுங்கு சினிமா இயக்குனர்  வம்சி தான் இயக்கி வருகிறார்.

தில் ராஜு இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, விஜய்க்கு அப்பாவாக சரத்குமார், சகோதரனாக ஷாம்,  ராஷ்மிகா வின் அப்பாவாக  பிரபு ஆகியோர்கள் நடித்து வருகிறார்கள் மேலும் யோகி பாபு இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பாங்கான திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் பெப்ஸி தொழிலாளர் சங்க தலைவர் இயக்குனர் செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் நடிகர் அஜித்குமார் தொடர்ந்து ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்துவது தமிழகத்தில் உள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை உருவாக்கி உள்ளது அதனால் தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என ஆர்கே செல்வமணி தெரிவித்திருந்தார்.

அதேபோல் ஆர்கே செல்வமணி குறிப்பிட்டு அஜித்தை மட்டும் பேசியதில் உள்நோக்கம் ஏதோ இருக்கிறதோ என சினிமா பிரபலங்கள் பேசிவருகிறார்கள் இந்த நிலையில் ஆர்கே செல்வமணி அஜித்தை பற்றி பேசும் இந்த நேரத்தில் திடீரென விஜய் தன்னுடைய படப்பிடிப்பை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளார். அதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தமிழ்நாட்டுக்கு படப்பிடிப்பை மாற்றுவதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு தயாரிப்பு நிறுவனம் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றால் அதற்கு அதிகமாக செலவாகும் அதனால் ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தி கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்கே தெரியும் என தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து விளக்கம் கொடுத்துள்ளார்கள் ஆனால் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து படப்பிடிப்பை ஹைதராபாத்தில் இருந்து தமிழகத்தில் ஏதாவது ஒரு இடத்திற்கு மாற்றினால் அங்கே உள்ள தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என தொடர்ந்து நச்சரித்து வருகிறார்.

ஒரு காலகட்டத்தில் டென்ஷனா தயாரிப்பு நிறுவனம் நடிகர் விஜய் நடிப்பு வேலையை மட்டும் பார்க்கட்டும் தேவையில்லாமல் தயாரிப்பு வேலைகளில் மூக்கை நுழைக்க வேண்டாம் என தயாரிப்பு நிறுவனம் இயக்குனரிடம் கூறி விஜய்யின் பிளானுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த தயாரிப்பாளர்கள் படத்தில் விஜய் நடிக்கும் பொழுது விஜய் என்ன சொல்கிறாரோ அதை தான் தயாரிப்பு நிறுவனம் பின்பற்ற வேண்டும் ஆனால் ஆந்திராவை பொருத்தவரை விஜய் என்ன கூறினாலும் அதை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக் கொள்ளாது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளது தயாரிப்பு நிறுவனம்.