தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தற்போது இவர் சிறுத்தை சிவாவுடன் முதல் முறையாக கைகோர்த்து அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.
அதற்கு முன்பு சில அப்டேட்டை கொடுத்த வண்ணமே இருக்கிறது படக்குழு. மேலும் அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி உடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பு, மீனா, யோகிபாபு, சூரி போன்ற பல டாப் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இருந்து இதுவரை போஸ்டர் மற்றும் மூன்று பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தான் உள்ளது மேலும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது வேற லெவல் எதிரி உள்ளது இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருந்தாலும் இன்னும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஒரு சூப்பர் செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் கசிந்துள்ளது. அதாவது ரஜினி நடிகை கீர்த்தி சுரேஷுடன் தற்போது நடித்து உள்ளார் ஆனால் முன்பாகவே அவரது அம்மாவுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
1981 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி கீர்த்தி சுரேஷின் அம்மாவின் மேகனா அவர்களுடன் இணைந்து நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது மகளுடன் ரஜினி நடித்திருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.