தளபதி விஜயின் தலைகனம் பற்றி பேசிய ஜூனியர் என்டிஆர்..! இதற்கெல்லாம் தனி தில்லு வேணும்..!

vijay
vijay

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாகவும் ரசிகர்களின் கனவுக் கண்ணனாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் டாக்டர் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்தான் தயாரித்து வருகிறது மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் பிரம்மாண்ட இயக்குனர் என்று போற்றப்படும் ராஜமவுலி  rrr என்ற திரைப்படத்தினை இயக்கி உள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற ஜனவரி மாதம் வெளியாக உள்ளதன் காரணமாக உலக சினிமாவே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு எதிர்பார்ப்புடன் இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் இந்த திரைப்படத்தின்  ரிலீஸ் தேதி ஏப்ரல் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் படம் கண்டிப்பாக ரிலீஸ் ஆகி விடும் என்ற நம்பிக்கையில் பல்வேறு ரசிகர்களும் ஓடிடியில் ப்ரமோஷன் செய்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் ராஜமவுலி ராம்சரன் ஜூனியர் என்டிஆர் என அனைவரும் கலந்து கொண்டார்கள் அப்போது ஜூனியர் என்டிஆர் தளபதி விஜயை பற்றி புகழ்ந்து தள்ளியது மட்டுமில்லாமல் இன்று சூப்பர் ஸ்டார் லெவலில் இருக்கும் தளபதி விஜய் தன்னுடைய புகழையும்  வெற்றியையும் தலைக்கு எடுத்துக்கொள்ளாமல் தலைக்கனம் இன்றி இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படம் வெளியான பிறகு அவருடைய திரைப்படத்தை நான் பல முறை பார்த்து விட்டு அவரிடம் பலமுறை பேசியுள்ளேன். விஜய் எனக்கு ஒரு நல்ல நண்பர் மட்டுமின்றி அவர் சிறந்த ஆசான் என்று சொல்வேன் என ஜூனியர் என்டிஆர் பேசியது விஜய் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.