சினிமா மற்றும் மீடியா உலகில் சாதிக்க ஆசைப்படும் பலரும் ஆரம்பத்தில் கிடைக்கின்ற சின்னச்சின்ன வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேறுகின்றனர். அந்த வகையில் இவர்களுக்கு மிக முக்கிய அடித்தளமாக அமைவது சின்னத்திரை பிக்பாஸ் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் முகம் தெரியாத பல பிரபலங்கள் கலந்து கொண்டு மக்கள் மற்றும் ரசிகர்கள் சினிமா பிரபலங்கள் என அனைவர் மத்தியிலும் ரீச் அடைந்து நல்ல எதிர்காலம் கிடைக்கின்றன. அந்த வகையில் ஜல்லிக்கட்டு பிரச்சனையின் போது மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தியதன் மூலம் பிரபலமானவர் ஜூலி.
அப்போது தான் விஜய் டிவியில் புதிதாக பிக் பாஸ் சீசன் 1 அறிமுகமானது அந்த முதல் சீசனில் ஜூலி போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு சிறப்பித்தார் ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவர் இருந்தபோது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை தான் அதிகம் சம்பாதித்து வெளியேறினார். மேலும் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு வெளியேறிய ஜூலிக்கு நேரிலும் பலர் நெகட்டிவ் கமெண்ட்டுகள் வெளிவந்தன/
அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து ஓடிய ஜூலியானா பின்பு ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இந்த நிகழ்ச்சியில் அவருக்கு முன்பிருந்த நெகட்டிவ் ஃபேம் முற்றிலுமாக மாறுபட்டு ரசிகர்கள் பலருக்கும் பிடித்த போட்டியாளராக மாறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆகுவார் எனவும் பலரும் எதிர்பார்த்தனர் ஆனால் இதில் பாதியிலே நல்ல பெயருடன் வெளியேறினார். இந்த நிலையில் The golden crown awards வழங்கிய the trending player of Bigg Boss ultimate Tamil என்கின்ற விருதைப் பெற்றுள்ளார். இதனை மிக மகிழ்ச்சியுடன் ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களுடன் தெரிவித்துள்ளார்.