கடந்த நான்கு வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 1 னில் கலந்துகொண்டு பெருத்த அவமானத்தை சந்தித்த ஒருவர் ஜூலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சி என்று அனைவராலும் போற்றப்பட்டார். இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இவருக்கு எதிராக ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு வெளியேறி சில காலங்கள் தலைமறைவாகி இருந்தார். சிறிது காலம் கழித்து தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் பிறகு சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் எப்படியாவது கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படும் கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதற்கு ரசிகர்கள் ஜூலியை பங்கமாக கலைத்தாலும் அதனை பற்றி கவலைப்படாத ஜூலி தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்பு ஜூலி தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் காசு வந்தா காக்கா கழுதை கூட கலர் ஆயிடும் போல என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜூலி எந்த ஊர்ல காக்கா சம்பாரிச்சு கலர் ஆச்சு போய் வேலையை பாரு என்று கமென்ட் செய்துள்ளார். இந்த நிலையில் இந்த செய்தி இணையதளத்தில் தற்பொழுது ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.