பரணிக்கும் ஜூலிக்கும் இடையே நடந்தது பற்றி நீண்ட நாட்களுக்கு பிறகு கூறும் ஜூலி!!

julie 4
julie 4

சமீபகாலமாக வெள்ளித்திரைக்கு ஈடு இணையாக வலம் வந்துகொண்டிருக்கிறது சின்ன திரை தொலைக்காட்சி என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதற்கு முக்கிய காரணம் கமல் ஹாசன் தொகுத்து வழங்குவது மற்றும் அதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து உள்ளவர் என்பதால் இதனை ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்த்து வருகின்றனர்.

இதன் காரணமாகவே அது தற்பொழுது பிரபலமடைந்துள்ளது 3 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் நான்காம் கட்ட சீசன் தற்போது தொடங்க உள்ளதாக தெரியவருகிறது. இருப்பினும் இந்த சீசன்களில் மிகவும் பிரபலமடைந்த சீசன் என்றால் அது பிக் பாஸ் சீசன் 1 தான். இந்த சீசனில் பல போட்டியாளர்கள் தனது திறமையை வெளிப்படுத்திக் மக்கள் மத்தியில் நல்லதொரு நற்பெயரை சம்பாதித்தனர்.

ஆனால் ஒரு சில பிரபலங்கள் பேச்சுக்கள் மற்றும் செயல்களின் மூலம் வெறுப்பு கூறிய நபராக காணப்பட்டனர். அதிலும்  குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர பெண் என்று அனைவராலும் பார்க்கப்பட்ட ஜூலி அவர்கள் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்டு சர்ச்சையான பேச்சுகள் மற்றும் செயல்களில் ஈடுபட்டதால் வெறுப்புக்குரிய நபராக காணப்பட்டார் பிக்பாஸில் இருந்து வெளிவந்த இவரை பலரும் விமர்சித்தனர்.

அதற்கு முக்கிய காரணம் இவர் பிக்பாஸ் சீசனில் இவருடன் இணைந்து பலர் போட்டியிட்டு வந்தனர் அதிலும் குறிப்பாக பரணியை அதிகமாக விமர்சித்தது. எனவே பரணி பிரச்சனை தாங்க முடியாமல் வெளியேற வேண்டுமென முயற்சித்துக் கொண்டிருந்தார். மேலும் இவர் கடைசியாக வெளியேறும் பொழுது பரணியை இவர் ஏறெடுத்தும பார்க்காமல் வித்தியாசமாக நடந்து கொண்டதால் மக்கள் மத்தியில் வெறுப்புக்குரிய நபராகக் காணப்பட்டார். இது குறித்து தற்போது பேட்டி ஒன்றில் கூறிய ஜூலி.

முதலில் நான் அண்ணன் என்று கூறினேன் இருப்பினும் அவர் வெளியேறும் பொழுது அவரை நான் கண்டுகொள்ளாதது எனக்கு மிகப்பெரிய குற்ற உணர்ச்சியாக இருந்தது. அதனை அடுத்து அவர் வெளியே சென்ற பொழுது நான் அவர் காலில் விழுந்தென்.  அவர் எதுவும் பேசவில்லை பிறகே நான் அவருக்கு கால் செய்தேன். பிக்பாஸில் இருந்து அவர் வெளிவந்த பிறகு போன் நம்பரை மாற்றி விட்டதாக தெரிய வந்தது. மேலும் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு நான் பிக்பாஸ் பார்ப்பதை நிறுத்திவிட்டேன் எனவும் கூறினார்.