விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜூலி ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முழு ஈடுபாடு கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கி அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தார். அதே சூட்டோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கிய ஜூலி தன் பெயரை தானாகவே கெடுத்து கொண்ட்டார்.
அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் தலைகாட்டி வந்த ஜூலி ஹீரோயினாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார் ஆனால் அது கை கூடி வரும் நேரத்தில் காணாமல் போனது. அதன் பிறகு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட கறைகளை துடைத்தார்.
இப்படி தனது மேலிருந்த கரையை கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்து வந்த ஜூலி தற்போது ஒரு சாக்கடைக்குள் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகை ஜூலி பிரபல நடிகரின் மகனை காதலித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.
ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜூலி அதே நிகழ்ச்சியில் பிரபல நடிகரின் அதாவது ரியாஸ் கானின் மகனான ஷாரிக் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் மிக நெருக்கமாக மாறியது. இது ஒரு வதந்தி என கூறப்பட்டு வந்த நேரத்தில் இவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும் அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அது மட்டும் இல்லாமல் நடிகை ஜூலி தனது சமூக வலைதள பக்கத்தில் ஷாரிக்கும் ஜூலியும் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ஷாரிக் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.