ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒரே ஒரு பேட்டியின் ஆனால் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் வெகுவாக கவர்ந்தவர் ஜூலி. இவரின் பேச்சு திறமையை பார்த்து திரைப் பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் என்று அனைவரும் வியந்தார்கள் எனவே இவரை வீர தமிழச்சி என்று பாராட்டி வந்தார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனக்கு இருந்த மொத்த நல்ல பெயரையும் டேமேஜ் செய்துகொண்டு இந்நிகழ்ச்சிக்குப் பிறகு வெளியில் தலைகாட்ட முடியாமல் இருந்து வந்தார்.
அதன்பிறகு ஓரளவிற்கு வெளியில் வர ஆரம்பித்தார். தற்பொழுது சின்னத்திரை, வெள்ளித்திரை என்று பல நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தொடர்ந்து இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு முன்னணி நடிகை ரேஞ்சுக்கு வளர்ந்தது போல் பித்திக் கொண்டு வருகிறார்.
இந்நிலையில் பிரபல நடிகருடன் இவர் ஊர் சுற்றி வருவதாகவும் புகைப்படம் இணையதளத்தில் சமீப காலங்களாக வைரலாகி வருகிறது. முன்னணி நடிகரான ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் இவர்களின் மகனான சாரி கான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார்.
இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பென்சில் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் சாரி கான் மற்றும் ஜூலி இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வரும் சில புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த கோலிவுட் வட்டாரங்கள் இவர்கள் மிகவும் நெருக்கமாக இருப்பதை பார்த்து இவர்கள் காதலித்து வருவதாக கூறி வருகிறார்கள்.