19 வயது ஜோவிகா சொன்னதைக் கேட்டு அரண்டு போன சக போட்டியாளர்கள்.! வனிதா மேடம் சின்ன பொண்ண என்ன பண்ணி வச்சிருக்கீங்க ரசிகர்கள் சரமாரி கேள்வி.!

Jovika Vijaykumar open talk
Jovika Vijaykumar open talk

Jovika : டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் கோலகாலமாக அக்டோபர் 1ஆம் தேதி பிக் பாஸ் ஏழாவது சீசன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள் அதில் ஒருவர் வனிதாவின் மகள் ஜோவிகாவும் ஆவார்.

வனிதா ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் அதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள நிறை குறைகளை சொல்லி தான் அனுப்பி இருப்பார். என பலரும் கூறுகிறார்கள் வனிதாவின் மகள் முதல் நாள் சக போட்டியாளர்களிடம் கலந்துரையாடியுள்ளார் அப்பொழுது ஒரு சில காட்சிகள் ஒளிபரப்பப்பட்டது.

அதைப் பார்த்த ரசிகர்கள் வனிதாவை கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் அது சின்ன பொண்ணுக்கு  நீங்க தான் சொல்லி புரிய வச்சிருக்கணும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். அப்படி என்ன வனிதாவின் மகள் பேசினார் என இங்கே காணலாம்.

வனிதாவின் மகள் ஜோவிகா சக போட்டியாளர்களிடம் பேசும் பொழுது இந்த காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா என்று யோசிக்கும்படி பேசியுள்ளார் அவர் கூறியது என்னவென்றால் எனக்கு சுத்தமாக படிப்பே வராது படிப்பின் மீது ஆர்வமே கிடையாது சில பாடங்கள் எனக்கு புரியவே புரியாது பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை படிக்காத மாணவர்களிடம் ஒப்பிட்டு பேசுவார்கள்.

இது மாதிரியான மன உளைச்சல் எனக்கு அதிகமாக ஏற்பட்டது அதனால் நான் படிப்பை தொடர விரும்பவில்லை என முடிவெடுத்துவிட்டேன் ஒன்பதாம் வகுப்பு வரை மட்டுமே நான் படித்துள்ளேன் படிப்பின் மீது ஆர்வம் கிடையாது நடிக்க வேண்டும் சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்று மட்டுமே எனக்கு இருந்தது.

இதற்கு காரணம் சிறுவயதிலிருந்தே என்னுடைய குடும்பத்தில் அனைவரும் சினிமாவில் இருப்பதை பார்த்ததால் எனக்கு படிப்பில் கவனமே போகவில்லை. ஆனால் நடிப்பில் மட்டும் டிப்ளமோ படித்துள்ளேன் என கூறியுள்ளார். இவர் கூறியதை கேட்ட சக போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என யோசிக்கிறார்கள்.

படிப்பில் இவ்வளவு வீக்கா இருக்கிறாரே என்று வியந்து பார்க்கிறார்கள் அதற்கு பாடகரும் நடிகருமான யுகந்திரன் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நடிப்பு சம்பந்தமாக நிறைய இளநிலை பட்டங்கள் இருக்கிறது அதையாவது நீங்கள் முடித்து வைத்திருக்க வேண்டும் சினிமா சினிமாவில் நீங்கள் எவ்வளவு தூரம் வேண்டுமென்றாலும் செல்லலாம் அதற்கு இன்னும் உங்களுக்கு வயது இருக்கிறது. எப்படியாவது படித்து ஒரு பட்டத்தை பெற்று விடுங்கள் என கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அப்பொழுது கவர்ச்சி நடிகை விசித்திராவும் நீ கண்டிப்பாக 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்து விட வேண்டும் எனவும் இப்படி படிக்கவில்லை என்றால் பிற்காலத்தில் ரொம்ப கஷ்டப்படுவாய் எனவும் கூறினார் பன்னிரண்டாம் வகுப்பு வரை முடிக்க வேண்டியது அடிப்படை கல்வி அதையாவது நீ முடித்து வைக்க வேண்டும் எனவும் கூறினார்.

இவர்கள் பேசுவதை கேட்ட ரசிகர்கள் ஜோவிகா தான் சின்ன பொண்ணு அவங்களுக்கு எதுவும் தெரியாது வனிதா மேடம் நீங்களாவது புரிய வச்சு படிக்க வையுங்கள் ஏன் இப்படி இருக்கீங்க என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.