தெலுங்கு சினிமாவில் சமீப காலமாக பிரம்மாண்ட பட்ஜெட் படங்கள் வெளிவந்து மக்களை மகிழ்விக்கின்றன அந்த வகையில் பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு படங்கள் உருவாகி உள்ளது. அதில் ஒன்று சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது திரைக்கு வெளிவந்துள்ள பிரம்மாண்ட பட்ஜெட் படம் புஷ்பா.
இந்த படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தலை மையமாக வைத்து இரண்டு பாகங்களாக எடுக்கப்பட இருக்கிறது முதல் பாகம் நேற்று கோலாகலமாக திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை கண்டு வருகிறது. தெலுங்கை தாண்டி மற்ற இடத்திலும் சக்ஸஸ்புள்ளாக இந்த படம் போய்க்கொண்டிருக்கிறது எதிர்பார்க்காத வசூலை இந்த படம் அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தை விளம்பரப்படுத்துவதற்காக படக்குழு சென்னை கேரளா உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வருகிறது. நேரில் சந்தித்து படத்தை பற்றி பேசி வருகிறது படக்குழு அந்தவகையில் அல்லு அர்ஜுன் உள்பட பலர் சரியான நேரத்திற்கு வந்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
ஆனால் இந்த படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனா மட்டும் நேரத்திற்கு வராமல் இரண்டு மணி நேரம் கழித்துதான் பிரஸ்மீட்டுக்கு வந்துள்ளார் இதனை அடுத்து கடுப்பான பத்திரிகையாளர்கள் அனைவரும் ராஷ்மிகா மந்தனாவை கடுமையாக சாடி உள்ளனர் ஆனால் ராஷ்மிகா மந்தனாவை காப்பாற்ற அல்லு அர்ஜுன் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு பத்திரிக்கையாளர்களை ஒருவழியாக சாந்தப்படுத்தினார்.
நாலஞ்சு ஹிட் படம் கொடுத்த பெரிய ஆள் நினைத்து விட்டீர்களா என பத்திரிகையாளர்கள் ராஷ்மிகா மந்தனா வை சொல்லாத ஒரு குறை தான் அந்த அளவிற்கு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஒருவழியாக அல்லு அர்ஜுன் மன்னிப்பு கேட்டு அந்த பிரஸ்மீட் ஒரு வழியாக முடித்து விட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.