சமீபகாலமாக தொலைக்காட்சியிலிருந்து பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வெள்ளித்திரைக்கு படையெடுத்து வருகிறார்கள், அப்படி வருபவர்கள் சினிமாவில் தாக்குப் பிடிப்பார்களா என்று கேட்டால் ஒரு சிலர் மட்டுமே தாக்குபிடிக்கிறார்கள்.
பலர் பட வாய்ப்பே இல்லாமல் பாதியிலேயே சினிமாவை விட்டு வெளியே செல்கிறார்கள், சீரியல்களில் இருந்தும் தொலைக்காட்சிகளில் இருந்தும் வெள்ளித்திரைக்கு படையெடுத்து ஜெயித்தவர்கள் பலர் அதற்கு உதாரணமாக சந்தானம் சிவகார்த்திகேயன் ஆகியோர்களை சொல்லலாம்.
அதேபோல் தொலைக்காட்சிகளில் இருந்து வந்த பெண்கள் பலர் பெரிய அளவில் சாதிக்க முடியாமல் இருக்கிறது, ஆனால் அதை உடைத்து எங்களாலும் சாதிக்க முடியும் என நிரூபித்தவர் பிரியா பவானி சங்கர், இவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தான் தனது வாழ்க்கையை தொடங்கினார் பின்பு வெள்ளித்திரையில் கால்தடம் பதித்து தற்பொழுது முன்னணி நடிகையாக மாறிவிட்டார்.
அந்தவகையில் மீண்டும் ஒரு செய்தி வாசிப்பாளர் வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்க இருக்கிறார், அவர் வேறு யாரும் இல்லை செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமி தான், இவர் ஜெய் நடிக்கும் புதிய திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்க இருக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பாரதிராஜா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. செய்தி வாசிக்கும் பொழுது திவ்யா துரைசாமி கண் சிமிட்டாமல் ரசிகர்கள் பார்ப்பார்கள் ஆனால் இப்பொழுது முதன் முறையாக படத்தில் பார்க்க இருக்கிறார்கள்.