தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு பாதையை உருவாக்கிய நடிகை நயன்தாரா இவ்வாறு பிரபலமான நமது நடிகை சுமார் ஏழு வருடங்களாக இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் இவர்களுடைய காதல் தற்போது திருமணத்தில் முடிந்துவிட்டது.
இந்நிலையில் இவருடைய திருமணம் முதலில் திருப்பதியில் நடைபெற இருந்தது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஆனால் அந்த திருப்பதி கோயிலில் சுமார் 150 பேருக்கு மேலாக அனுமதி இல்லாததன் காரணமாக இந்த திருமணம் உடனே சென்னையில் உள்ள மகாபலிபுரம் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டது.
இவ்வாறு இவர்களுடைய திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் நட்சத்திரங்களும் கோவிந்த் அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக் கான் போன்ற பிரபலங்கள் கலந்துகொண்டது பெருமைக்குரிய விஷயமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் இவருடைய திருமணம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது என தெரிய வந்துள்ளது.
அந்த வகையில் இவர்களது திருமணம் முடிந்த கையோடு பிரஸ்மீட்டில் பேசுவதாக கூறிய நிலையில் அவை உடனடியாக நடத்தப்பட்ட நிலையில் பத்திரிகையாளர்கள் பல்வேறு வகையான கேள்விகளை கேட்டு வந்தார்கள் இதற்கு நயன்தாராவும் மிக கூலாக பதில் கொடுத்து வந்தார்.
அந்தவகையில் ஒரு பத்திரிக்கையாளர் நயன்தாரா மேடம் உங்களுக்கு ஹனிமூன் எங்கே என கேள்வி எழுப்பிய நிலையில் நயன்தாரா உடனே சிரித்துக்கொண்டே விக்னேஷ் சிவன் முகத்தைப் பார்த்தார். மேலும் அவர்களுடைய கேள்விக்கு எந்த ஒரு பதிலும் கூறவில்லை. மேலும் நயன்தாரா தற்போது பாலிவுட்டில் பிசியாக இருப்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் அந்த கைவசமுள்ள திரைப்படங்களை முடித்த பிறகுதான் ஹனிமூன் செல்ல இருப்பதாக தெரியவந்துள்ளது.