Jothika Ra Ra Song Dance : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக வருபவர் ஜோதிகா இவர் முதலில் வாலி படத்தில் கேமியோ ரோலில் நடித்து என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு நல்ல நல்ல படங்களில் நடித்த தன்னை வளர்த்துக் கொண்டார். தன்னுடைய படங்கள் அனைத்தையுமே தன்னை மறக்க முடியாத அளவிற்கு ஜோதிகா சிறப்பாக நடித்திருப்பார்.
அதில் ஒன்றுதான் சந்திரமுகி. இந்தப் படத்தில் முதலில் ஒரு குடும்ப பெண்ணாகவும், அதன் பிறகு சந்திரமுகி பேயாகவும் இவர் மாறுவார் ஒவ்வொன்றுமே பிரமாதமாக இருக்கும்.. மேலும் சந்திரமுகி படத்தில் இவர் ரா ரா பாடலுக்கு நடனம் ஆடியது நாம் காலம் கடந்தும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரா ரா பாடல் குறித்து கலா மாஸ்டர் பேசி உள்ளார்.
அவர் சொன்னது என்னவென்றால்.. ரா ரா பாடலுக்கு வினித்துடன் ஜோதிகா சேர்ந்து நடனம் ஆண்ட வேண்டும். ஆனால் ஜோதிகா வினித்தை பார்த்து பயந்தார் அப்பொழுது கலாம் மாஸ்டர் வினித் ஒரு கிளாசிக் டான்சர் அவரைப் பார்த்து பயப்பட வேண்டாம் உன்னால் முடிந்ததை செய் என கூறி உள்ளார்.
அப்பொழுது ஜோதிகா இவ்வளவு கிளாசிக் வேண்டாம் என கூறியிருக்கிறார் அப்பொழுது கலா மாஸ்டர் ஜோதிகாவிடம் நீ இந்த பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடினால் உனக்கு ஒரு நல்ல காஸ்ட்லியான சேலை வாங்கி தருகிறேன் என கூறியுள்ளார் அதன் பிறகு நடிகை ஜோதிகா ரா ரா பாடலுக்கு நடனம் ஆடினாராம்.
படம் வெளிவந்து நல்ல வெற்றி பெற்றது அந்த படத்தில் ஜோதிகாவின் அனைத்து சீன்களும் கைதட்டல் வாங்கியது அதுபோல ரா ரா பாடலுக்கு நான் சொல்லி தான் புரிய வேண்டும் அல்ல நல்ல ரீச் மக்கள் மத்தியில் இருந்தது இதை பார்த்துவிட்டு ஜோதிகா என்னை கூப்பிட்டு வைர வளையல் வாங்கி கொடுத்தார் என கூறியுள்ளார்.