“அரபி குத்து” பாடலை பாடிய பாடகி ஜோனிடா காந்தி – ஹீரோயின்னாக நடிக்க உள்ளார்.! ஹீரோ யார் தெரியுமா.?

beast-
beast-

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் பட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடித்துவிட்டு டப்பிங் பணிகளை நோக்கி நகர்ந்துள்ளது மேலும் பல்வேறு விதமான அப்டேட்டுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

முதலில் ப்ரஸ்ட் போஸ்டர் வெளியாகிய நிலையில் பிப்ரவரி 14  தேதி காதலர் தினத்தை முன்னிட்டு படக்குழு அரபி குத்து பாடலை வெளியிட்டு அசத்தி உள்ளது. பாடல் ஒரு பக்கம் சிறப்பாக இருக்க மறுபக்கம் பூஜா ஹெக்டே மற்றும் விஜய் டான்சஸ் ரசிக்கும்படி இருந்தது. மேலும் அரபி குத்து பாடல் youtube – ல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை மற்றும் தீம் மியூசிக் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அரபி குத்து பாடலை இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இணைந்து பாடியிருக்கிறார்.  பின்னணி பாடகியாக இருந்து வரும் ஜோனிடா காந்தி இதுவரை பல்வேறு பாடல்களுக்கு பின்னணியை பாடல் பாடியுள்ளார்.

அந்த வகையில் செல்லமே, மறந்தாயே, மெண்டல் மனந்தில் உள்ளிட்ட பல தமிழ் பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிக்கவும் புதிய படமான walking talking strawberry ice cream என்னும் திரைப்படத்தில் பாடகி ஜோனிடா காந்தி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிகர் கிருஷ்ணா நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது சூரரைப்போற்று படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் தற்போது இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அதன் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

jonita gandhi
jonita gandhi