ஜாலியோ ஜிம்கானா என ஒரே ஒரு வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த லாஸ்லியா.! வைரலாகும் வீடியோ

losliya
losliya

இலங்கையை சேர்ந்த லாஸ்லியா செய்தி வாசிப்பதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் இவர் அடிக்கடி சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகை படங்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள்.

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டார் அதுமட்டுமில்லாமல் இந்த பிக் பாஸ் சீசனில் இரண்டாவது இடத்தை பிடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது அது மட்டுமில்லாமல் பட வாய்ப்பும் அமைந்தது.

அந்த வகையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் சமீபத்தில் தான் வெளியானது இதனைத்தொடர்ந்து கூகுள் குட் டப்பா  என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் இப்படி அடுத்தடுத்து பட வாய்ப்புகள் லாஸ்லியா அவர்களுக்கு அமைந்து வருகிறது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் திரைப்படத்தில் இரண்டாவது சிங்கிள் ட்ராக் சமீபத்தில் வெளியிடப்பட்டது இந்த பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வைரலானது.

இந்தநிலையில் லாஸ்லியா பீஸ்ட்  திரைப்படத்தின் 2வது பாடலான ஜாலியோ ஜிம்கானா என்ற பாடலுக்கு வெள்ளை நிற புடவையில் நடந்து வருவது போல் சில அசைவுகளை செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம்  வைரலாகி வருகிறது.