Actor Ajith: பிரபல வில்லன் நடிகர் அஜித் பலகோடி பேருக்கு வழிகாட்டி என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து வரும் அஜித் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.
அப்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் படத்தில் இணைந்தார். ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதை பிடிக்காத காரணத்தினால் பிறகு அஜித்தின் அடுத்த படத்தினை மகிழ் திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது.
அஜித் – மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு விடாமுயற்சியான பெயர் வைத்துள்ளனர். இதுவரையிலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்காமல் இருந்து வரும் நிலையில் அதற்குள் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி வருகிறது.
அதாவது அஜித் விடாமுயற்சிக்கு பிறகு சன் பிரக்சஸ் நிறுவனம் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறாராம். இது குறித்து இதுவரையிலும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து வரும் ஜான் கொக்கன் அஜித் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சார்பட்டா பரம்பரை, கேஜிஎஃப், அஜித்துடன் துணிவு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜான் கொக்கன் தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அஜித்தின் தீவிர ரசிகர் ஆவார் எனவே இதன் காரணமாக இன்று ஆசிரியர் தினம் என்பதால் ஜான் கொக்கன் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, “கடவுள் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது அதனால் தான் ஆசிரியரை கொடுத்தார்”, சரியான வழிகாட்டி நாம் வாழ்க்கையில் உயர அவர்கள் வழிகாட்டுவார்கள். எனக்கு மட்டுமின்றி பல கோடி பேருக்கு அப்படி வழிகாட்டியாக இருக்கும் அஜித் குமார் சாருக்கு நன்றி என ஜான் கொக்கன் பதிவு செய்துள்ளார்.