பார்ட் 2 படத்தில் நடிக்க கோடிகளை கேக்கும் ஜோதிகா.! பிரபலங்கள் அதிர்ச்சி.!

jothika--tamil360newz
jothika--tamil360newz

 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது இப்படத்தை பி வாசு அவர்கள் இயக்கியிருந்தார். இப்படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர் போன்ற பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தனர்.

முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின அது உண்மை தான் என ராகவா லாரன்ஸ் உறுதிப்படுத்தினார் இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பி வாசு அவர்கள் இயக்கவுள்ளார் இப்படத்தில் ஹீரோவாக ராகவாலாரன்ஸ் ரஜினிக்கு பதிலாக நடிக்க உள்ளார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக ஜோதிகா அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றார்.

இதனையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அவரை நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் இருப்பினும் அவரை அணுகிய பொழுது ஜோதிகா அவர்கள் கோடிகளில் சம்பளம் கேட்டதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ஜோதிகா தற்போது படங்களில் நடித்து வந்தாலும் கோடிகள் வாங்கும் அளவிற்கு இல்லை என்பதால் படக்குழுவினர் தயக்கம் காட்டி வருகின்றனர் இருப்பினும் ஜோதிகாவிற்கு பதிலாக இளம் நடிகை யாராவது நடிக்க வைக்கலாம் என படக்குழுவினர் ஆலோசித்து வருகின்றனர். ரசிகர்கள் ஜோதிகா இடத்தில் வேறு ஒருவர் இந்த கதைக்கு செட் ஆகுவரா என கூறிவருகின்றனர்.