ஜோதிகா படத்தை தொடர்ந்து சந்தானம் படத்தை குறிவைக்கும் டிஜிட்டல் நிறுவனம்.!விவரம் இதோ!!

santhanam
santhanam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஜோதிகா இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் பொன்மகள் வந்தாள். இப்படம் சமீபத்தில் திரைக்கு வர இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிவராமல் தாமதமாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவிற்கு 9 கோடிக்கு விற்றுள்ளது.

இப்படம் எடுக்கப்பட்டது மொத்த செலவு 4.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் இந்தியில் வெளியாக உள்ள திரைப்படம் லக்ஷ்மி பாம். இப்படத்தில் அக்ஷய் குமார் அவர்கள் நடித்துள்ளார் இத்திரைப்படம் மே 22ம் தேதி வெளியாக இருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியிடாமல் போனதே இதனையடுத்து இப்படத்தினை டிஸ்னி ஹாட்ஸ்டார் ரிலீஸ் செய்வது பற்றி பேச்சுவார்த்தை நடத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

laxmi
laxmi

தமிழ் முன்னணி நடிகர்களின் படங்களில் அமேசான் பிரைம் வீடியோ மற்றும் பல ஆன்லைன் வர்த்தகங்களில் விற்கப்படுகின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான சந்தானத்தின் படமான சர்வர் சுந்தரம் படமும் OTT முறையில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக தகவல் வருகிறது. இப்படம் 2016ஆம் ஆண்டு சர்வர் சுந்தரம் திரைப்படம் தயாராகிவிட்டது ஆனால் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக இப்படம் ஜனவரியில் வெளியாக இருந்தது .

ஆனால் அதே சமயத்தில் சந்தானம் நடித்து வெளிவந்த டகால்டி படம் வெளிவந்தால் இப்படம் தள்ளிப்போனதுப என்பது குறிப்பிடத்தக்கது. சர்வர் சுந்தரம் படத்தை அமேசன் பிரைம் நிறுவனம் தயாரிப்பாளர் தரப்புப் பேச்சுவார்த்தை நடத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது இதனால் தியேட்டர் உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.