இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான காபி வித் காதல் திரைப்படம் அக்டோபர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இன் நிலையில் காபி வித் காதல் படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் ஜெய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.
இந்த படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிவடைந்த நிலையில் இந்த படம் தற்போது வெளியாக காத்து இருக்கிறது. மூன்று அண்ணனும் தம்பிகள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி 4 பெண்களை காதலிக்கும் ஒரு குழப்பமான கதை அம்சம் கொண்ட படம் காமெடி மற்றும் ரொமான்ஸ் கதையாக உருவாக்கப்பட்டது என்று ட்ரெய்லரிலிருந்து தெரிய வருகிறது.
இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் ஆகிய மூவரும் அண்ணன் தம்பியாக இருக்கிறார்கள் மாளவிகா சர்மா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, ஆகிய நான்கு கதாநாயகிகளையும் மாறி மாறி காதலிக்கிறார்கள் இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் தான் இந்த படத்தின் கதை என கூறப்படுகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் காமெடிக்கு யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லே நடித்து உள்ளனர். மேலும் மற்றும் டிடி என்கிற திவ்ய தர்ஷினி மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இந்த திரைப்படம் நிச்சயம் சுந்தர் சி யின் வெற்றி படங்களின் வரிசையில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் முழுக்க முழுக்க காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு மசாலா திரைப்படமாக உருவாகியுள்ளது என்று ட்ரைலரில் முழுமையாக பார்க்கலாம். அதில் ஸ்ரீகாந்த் ஜீவாவிற்கும் ஜெயிக்கும் இடையே ஒரு வில்லனாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதோ காபி வித் காதல் படத்தின் ட்ரெய்லர்.