Vijay : தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னனாக வருவர் தளபதி விஜய். இவர் வாரிசு படத்தை தொடர்ந்து லியோ படத்தில் நடித்துள்ளார். படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது விஜய் உடன் இணைந்து சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த்..
த்ரிஷா, பிக் பாஸ் ஜனனி என மிகப் பெரிய திரைபடமே நடித்துள்ளனர். லியோ படம் வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது. லியோ சூட்டிங் முடிந்த கையோடு விஜய் வெங்கட் பிரபுவுடன் கூட்டணி அமைத்து தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளி வருகின்றன..
இந்த நிலையில் ஜில்லா படத்தை எடுத்த இயக்குனர் நேசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் மோகன்லால் மற்றும் விஜய் பற்றி பேசியுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. ஜில்லா படத்தின் டைட்டில் கார்டில் யார் பெயர் முதலில் போடுவது என விஜய் மற்றும் மோகன்லலிடம் கேட்டாராம்.. அப்படி மோகன்லாலிடம் கேட்கும் போது இது விஜய் படம் தானே அப்போ விஜய் பெயர்தான்..
முதலில் வரணும் என் பெயர் எங்கு வந்தாலும் பிரச்சனை இல்லை என பெருந்தன்மையாக கூறிவிட்டாராம்.. உடனே இது குறித்து விஜய் இடம் கேட்டுள்ளார் அதற்கு விஜயோ மோகன்லால் சார் பெயர் தான் டைட்டிலில் முதலில் வர வேண்டும் என்றாராம்.. விஜய் கண்டிப்பாக முதலில் மோகன்லால் சார் பெயர்தான் வரவேண்டும் என சொல்லியதால்..
முதலில் அவரது பெயரை போட்டு தான் ஆரம்பித்தனராம். இதை பார்த்த மோகன்லால் ரசிகர்கள் ட்விட்டரில் பெரிய அளவில் வைரல் ஆக்கி வருகின்றனர் மேலும் விஜயின் லியோ படத்திற்கு எங்களுடைய சப்போர்ட் என்றும் இருக்கும் எனவும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.