ஜிகர்தண்டா 2 பாகம் உருவாவதை உறுதி செய்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.! அவரே வெளியிட்ட வீடியோ..

பொதுவாக சினிமாவில் ஒரு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய ஒரு வெற்றியினை பெற்று விட்டால் அதனை அடுத்தடுத்த பாகங்கள் தயாரிப்பதனை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மேலும் ரசிகர்களும் அந்த திரைப்படங்களின் இரண்டாம் பாகத்திற்கு மிகவும் எதிர்பார்ப்புடனும் இருந்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகைகள் தற்பொழுது முதல் பாகம் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்பொழுது இரண்டாவது பாகத்தை உருவாக்குவதற்காக முடிவு செய்துள்ளார்கள் பட குழுவினர்கள் அவ்வாறு பிளாக்பஸ்டர் வெற்றிப்பெற்ற திரைப்படம் தான் ஜிகர்தண்டா. இந்தத் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தகவல் கூறியுள்ளார்.

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பெண்களின் சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சித்தார்த் ஜிகர்தண்டா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். 2014ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது.

மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் இத்திரைப்படத்தில் நடித்து மிரட்டிய பாபி சி்ம்ஹா தேசிய விருதை வென்றார். இவ்வாறு அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பினை பற்றிய கொண்டாடப்பட்ட இத்திரைப்படத்திம் வெளியாகி இதோடு 8 வருடங்கள் ஆகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் அதனை கொண்டாடும் வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவுது அந்த வீடியோவில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்திற்கான கதை எழுதும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 8 வருடங்கள் கழித்து இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க உள்ள நிலையில் இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஹீர, ஹீரோயின்கள் யார் என்பது குறித்த தகவல் விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பட குழுவினர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.