டாம் குரூஸ் எப்படி எனக்கு பழக்கம் இல்லையோ அதுபோல சிம்பு அவர்கள் எனக்கு நண்பர் இல்லை.! உண்மையை சொன்ன ஜீவா.!

jeeva-and-simbu
jeeva-and-simbu

Actor Jiiva said about actor simbu: சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கேவி ஆனந்த். இவர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் கோ. இத்திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஜீவா அவர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

கோ படத்தில் முதலில் அஜித் அவர்கள் நடிப்பதாக இருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தயாரிபாளர் அஜீத்திடம் இந்த கதையை கூறுங்கள் என்று இயக்குனரை கேட்டுள்ளார். இயக்குனர் அதற்கு இது மாசான ஹீரோ கதை அல்ல என்று புறக்கணித்து விட்டார் அதன் பின்னர் ஜீவாவிடம் கதையைக் கூறி கால்ஷீட்டை உறுதிப்படுத்தினர். இந்நிலையில் சிம்பு மற்றும் கார்த்திகா ஆகியிருக்கும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது. சில சூட்கள் எடுக்கப்பட்டு இருந்தது.

மேலும் பாடலுக்காக வெளிநாடு செல்லவேண்டும் என்று சிம்புவிடம் கேட்டதற்கு அங்கெல்லாம் இப்ப வர முடியாது என மருத்துவிட்டார். இதனால் தயாரிப்பாளரிடம் இருந்து பெரும் பிரச்சனை வெடித்தது சிம்புவை விலக்கி விட்டு அடுத்த நடிகரை தேடி அலைந்து உள்ளார் இயக்குனர் கே வி ஆனந்த்.

இவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரமிடம் கதையை கூறி உள்ளனர். ஏதோ சில காரணங்களால் இப்படத்தில் அவரும் நடிக்க முடியவில்லை. எனவே பின்னர் ஜீவாவை உறுதி செய்தனர் படக்குழுவினர்.  பின்னர் ஜீவா இந்த படத்தின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவிற்கு ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தார்.

ஜீவாவுக்கும் சிம்புவுக்கும் எப்பொழுதுமே செட்டாகாது. எப்பொழுதும் அவர்கள் இருவரும் பேசிக் கொள்ள மாட்டார்கள். இதனை உறுதிபடுத்தும் வகையில் ஜீவா பேட்டி ஒன்றில் டாம் குரூஸ் எப்படி எனக்கு பழக்கம் இல்லையோ அதுபோல சிம்பு அவர்கள் எனக்கு நண்பர் இல்லை. மேலும் அவருடன் எனக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. ஆரம்பத்திலிருந்து அவருக்கும் எனக்கும் செட் ஆகாது  என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.