மிரட்டலாக வெளியாகியுள்ளது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2 டீசர்.!

Jigarthanda DoubleX - Teaser
Jigarthanda DoubleX - Teaser

Jigarthanda DoubleX : கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா 2 திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு மதுரையை மையமாக வைத்து உருவாகிய திரைப்படம் தான் ஜிகர்தண்டா இந்த திரைப்படத்தில் சித்தார்த்தன் நாயகனாக நடித்திருந்தார் அதேபோல் லட்சுமிமேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பாபி சிம்ஹா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டில் இந்த திரைப்படத்திற்காக பாபி சிம்ஹா அவர்கள் தேசிய விருதையும் பெற்றார் இப்படி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எட்டு வருடங்களுக்குப் பிறகு உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா ராகவா லாரன்ஸ் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் மேலும் படத்தை வருகின்ற தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு முடிவு  செய்துள்ளது.

இந்த நிலையில் தற்பொழுது படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது இந்த டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது டீசரில் எஸ் ஜே சூர்யா அவர்கள் இயக்குனர் போல் நடித்துள்ளார் அதேபோல் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் அவர்கள் நடித்துள்ளார்கள்.

டீசரில் டேய் இது சினிமா டா என்ற வசனம் எஸ் ஜே சூர்யா அவர்கள் பேசியுள்ளார்கள் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களையும் லைக் பெற்று வருகிறது. மேலும் இந்த டீசரில் கடைசியில் வருகின்ற தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள் பட குழு