பிரபல விஜய் டிவியில் கடந்த நான்கு வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 2 மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை ஜனனி ஐயர்.
இவர் அவன் இவன் திரைப்படத்தின் மூலம் சிறந்த நடிகையாக அனைவருக்கும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் எந்த படமும் இவருக்கு சொல்லும் அளவிற்கு கைகொடுக்கவில்லை.
பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இவர் ஆரம்ப காலத்தில் மாடலிங் துறையின் மூலம் தான் தனது கெரியரை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அந்தவகையில் 150க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்ததன் மூலம் சினிமாவிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்பொழுது இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜனனி ஐயர் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கிளாமரானா புகைப்படங்கள், வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது பேமஸ்சாக இருந்துவரும் பாடலான என்ஜாய் என்ஜாமி பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.