தமிழ்சினிமாவில் ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ‘கேவி ஆனந்த்’ இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு ஜீவா, கார்த்திகா நாயர், பியா, அஜ்மல் அமீர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்த திரைப்படம்தான் கோ. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது. குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வசூலை குவித்தது.
அன்றைய தினத்தில் இந்த திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. இந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் முன்னாள் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயர். இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமான திரைப்படம் தான் இது. தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.
மேலும் இந்த திரைப்படத்தில் அஜ்மல் ஜெகன் ஆகியோர்களும் நடித்திருந்தார்கள் அன்றைய காலகட்டத்தில் இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தும் திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் முதன் முதலில் ஜீவா நடித்த கதாபாத்திரத்தில் சிம்புதான் நடித்து வந்தார் இந்த தகவலை கேவி ஆனந்த் அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.
சில நாட்கள் கோ திரைப்படத்தில் நடித்த சிம்பு தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த திரைப்படத்தில் இருந்து விலகிக்கொண்டார் ஆனால் சிம்பு நடித்த காட்சிகள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இந்த காட்சியில் சிம்பு அழுகிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சிம்பு ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.
இதை பார்த்த சிம்பு ரசிகர்கள் இந்த திரைப்படத்தின் சிம்பு நடித்திருந்தால் வேற லெவல் இருந்திருக்கும் என கருத்து கூறி வருகிறார்கள்.