கலகலப்பு 2 படத்தை தொடர்ந்து மீண்டும் கூட்டணி சேரும் ஜீவா, சிவா.! படத்தை யார் இயக்க போவது தெரியுமா.? படத்தின் தலைப்பு கூட ரெடி.?

jeeva-and-siva

தமிழ் சினிமாவில் பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்றாலும் சினிமா உலகில் தனக்கென மிகப்பெரிய ஒரு அங்கீகாரமாக இடத்தை பிடிக்க முடியாமல் ஒரு சில ஹீரோக்கள் தடுமாறி வருகின்றனர்.

அந்த வகையில் நடிகர் ஜீவாவும், காமெடி நடிகர் சிவாவும் மக்கள் பெயரை சம்பாதித்தாலும் சினிமா உலகில் நிலையான இடத்தை பிடிக்க முடியமால் தவிக்கின்றனர். அவர்கள் இருவரும் சுந்தர் சி இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான கலகலப்பு 2 என்ற படத்தில் நடித்து அசத்தி இருந்தனர்.

திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் வசூல் ரீதியாகவும் நல்ல இடத்தைப் பிடித்தது.  இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் நடிகர் ஜீவாவும் மிர்ச்சி சிவாவும் இணைய உள்ளனர் இந்த திரைப்படத்தை எடுக்கப் போவது கன்னட இயக்குனர் பொன் குமார் என்பது குறிப்பிடதக்கது இதுவே அவருக்கு முதல் தமிழ் திரைப்படம் கூட.

நடிகர்கள் ஜீவா காமெடி நடிகர் சிவா இருவரும் இணையும் படத்திற்கு தற்பொழுது கோல்மால் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.   இந்த படத்தில் பாயல் ராஜ்புட் மற்றும் நடிகை தன்யா ஆகியோர்கள் அவர்களுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க  ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

kolmaal
kolmaal

இரண்டு ஹீரோக்களும் தனித்தனியாக சேர்ந்து நடித்தாலே அந்த படம் மிக காமெடியாக இருக்கும் மீண்டும் ஒருமுறை இவர்கள் இணைந்துள்ளனர். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் இவர்கள் படத்தை தற்போது எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.