தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வெற்றி கொண்டு வருபவர் நடிகர் ஜீவா இவர் 90 காலகட்டங்களில் இருந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ் சினிமாவில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றிப் படங்களாகவே இருந்து வந்துள்ளன.
அந்த வகையில் ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, நண்பன், கலகலப்பு 2 போன்ற படங்களாகும் இப்பொழுது கூட பல்வேறு படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். ஜீவா பல்வேறு டாப் நடிகர்களின் படங்களில் இணைந்து நடித்துள்ளார் அந்தவகையில் விஜயுடன் நண்பன், விக்ரமுடன் டேவிட் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
அப்படி தான் மீண்டும் ஒருமுறை விக்ரமுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தது அதை தவற விட்டுள்ளார் எந்த படத்தில் என்று விலாவாரியாக பார்ப்போம். விக்ரமின் ஐம்பதாவது படமான ஐ படம் ஷங்கர் எடுத்திருந்தார் இந்த படம் ஒரு வித்தியாசமான திரைப்படமாக உருவாகி இருந்தது இதில் விக்ரமின் நடிப்பு மிரட்டும் வகையில் அமைந்திருக்கும்.
இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தான் ஜீவா ஜீவாவுக்கு வந்தாதான் அந்த கதாபாத்திரம் வேறு எதுவும் அல்ல.. ஐ படத்தில் ஜானி என்கின்ற மாடல் ரோலில் ஒருவர் நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் படக்குழு நடிகர் ஜீவாவை தான் கேட்டு இருந்தது.
ஆனால் அவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் கால்ஷீட் கிடைக்காமல் போனது பின் ஜீவா இந்த படத்தை மிஸ் செய்யவே வேறு ஒருவர் அந்த படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் ஜீவா இப்போது சிவாவுடன் கைகோர்த்து கோல்மால் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.