தமிழ் சினிமாவின் இயக்குனர் மற்றும் நடனம் ஆடுபவர், பாடகி போன்ற பன்முக அம்சங்களையும் கொண்டவர் தான் ஐஸ்வர்யா. மேலும் இவரை இயக்கிய 3 என்ற திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. மேலும் இவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அதுமட்டுமில்லாமல் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 18 வருடங்கள் ஆன நிலையில் தற்போது இவர்கள் பிரியபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. மேலும் இவர் நடிகர் லாரன்ஸ் நடிப்பில் ஒரு புதிய திரைப்படம் இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இவர் சோஷியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வருகிற நிலையில் அவரது புகைப்படங்களையும் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார். ஆனால் அந்த வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
அதைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவரது இணையதளத்தில் பதிவுகளை வெளியிட்டு தான் வருகிறார். ஐஸ்வர்யா தனது மகன்களுடன் கொல்கத்தாவிற்கு ஐபிஎல் பார்க்க சென்ற நிலையில் நான் எங்கு போனாலும் என் உடற்பயிற்சியை மட்டும் விடமாட்டேன் என்று கூறும் விதத்தில் அவரது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைத் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு ரசிகர்கள் ஏன் பெல்ட் போடாம இருக்கிறீங்க என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனால் சில ரசிகர்கள் மட்டும் அதில் ஏதாவது ஒரு காரணம் இருக்கும் என்று கூறியுள்ளனர்.
விதாவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.