jayam ravi mega hit movies:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவர் 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜா இயக்கத்தில் ஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் இந்த படம் ஹிட் ஆனதால் அந்த படத்தின் பெயரையே தனது பெயருடன் இணைத்துக் கொண்டார்.
என்னதான் ஜெயம் ரவி சினிமாவின் பின்புளம் உள்ள நடிகர் என்றாலும் அவரின் திறமை தான் அவர் இன்னும் முன்னணியில் இருப்பதற்கு காரணமாக உள்ளது. பலபேர் வாரிசு நடிகர்களாக இருந்தாலும் காணாமல் போயுள்ளனர். இவரோ கதையை தேர்ந்தெடுக்கும் விதம் மற்றும் நடிப்பு ஆகிய அனைத்து திறமையாலும் இன்னும் சினிமாவில் நிலைநாட்டி தனக்கான ஒரு இடத்தைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிக்கும் திரைபடத்தில் கதை படத்திற்கு படம் வித்தியாசமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அதற்கேற்றார் போல் இவரும் நடித்திருப்பார் அதனாலேயே இவர் வெற்றி நாயகனாக திகழ்ந்து வருகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
இவர் நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படங்கள் ஜெயம், எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், ரோமியோ ஜூலியட், கோமாளி போன்ற அனைத்து படங்களுமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது. ஒவ்வொரு படத்திற்கும் கதை மற்றும் தோற்றம் ஆகிய அனைத்துமே முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதே இவரது வெற்றிக்கு காரணமாகும்.
ஜெயம் ரவி நேற்று அவர் தனது 40வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தற்பொழுது இவர் பூமீ என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படம் விவசாயத்தை மையமாக கொண்டு எடுக்கப்படுகிறதாம். இதனை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.