தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவி நடிப்பில் தற்போது அகிலன் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் பட குழுவினர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் திரைப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து பிரம்மாண்டமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார் ஜெயம் ரவி.
அந்த வகையில் தற்போது கல்யாண் கிருஷ்ணா இயக்கத்தில் அகிலன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டா இன்னும் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜெயம் ரவி கடல் கொள்ளையனாக நடித்திருக்கிறார். நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்து வந்ததால் மற்ற திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து வந்தது எனவே நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி சோலோவாக நடித்திருக்கும் அகிலன் படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் அகிலன் படத்திற்கு சாங் சி எஸ் இசையமைத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற முடிந்தது. அதில் பவானி சங்கர் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கும் நிலையில் கப்பல் வழியாக எப்படி கடதப்படுகிறது என்பதை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாகியுள்ளது.
மிகவும் லோக்கலான வசனங்களுடன் ஜெயம் ரவி நடித்திருக்கும் நிலையில் இந்த படம் வருகின்ற மார்ச் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அகிலன் பட டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.