தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அகிலன் திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ஜெயம் ரவி மணிரத்தினம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வந்ததால் இவரால் மற்ற படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் அகிலன் படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடைபெற ப்ரியா பவானி சங்கர் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளார் இந்த படம் நேற்று மார்ச் 10ஆம் தேதி வெளியானது.
இந்த படத்தில் ஜெயம் ரவி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் படும் லோக்கலான வசனங்கள் இடம் பெற்று இருந்தது. அந்த வகையில் ஜெயம் ரவியும் லோக்கலாக நடித்து அசத்தியிருந்தார் இந்தப் படம் ஒரு துறையின் செயல்பாடுகளையும் அதன் கருப்பு பக்கங்களையும் வைத்து திரில்லர் கதையம்சத்துடன் உருவாகி இருந்தது.
இந்த படத்தினை எஸ் கல்யாண கிருஷ்ணன் இயக்க போலிஸ் அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்று வருவதனால் முதல் நாள் வசூலை விட இதற்கு மேல் வரும் நாட்களில் மிகவும் குறைவான வசூல் தான் கிடைக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போது தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் அகிலன் படத்திற்கு முதல் நாள் ரூபாய் 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிவரும் நாட்களிலும் இதே போல் வசூலை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.