தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிம்பு மற்றும் ஜெயம் ரவி சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்தே இவர்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இவர்கள் தங்களுடைய இளம் வயதில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஒன்றாக பார்ட்டிக்கு செல்வது ஒன்றாகும் படம் பார்க்க செல்வது என மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்கள்.
அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயம் ரவி மற்றும் சிம்பு இருவரும் ஒரு இடத்திற்கு சென்ற பொழுது சிம்பு ஜெயம் ரவியை கேள்வி கேட்டு கலாய்த்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சிம்பு குசும்பு பிடித்தவர் என்பது அனைவருக்கும் தெரியும் அந்த வகையில் ஜெயம் ரவியிடம் சிம்பு திரிஷா, பவனா, ஸ்ரேயா, அசின், சுதா ஆகிய இந்த ஐந்து ஹீரோகளில் யாரை உனக்கு பிடிக்கும் என கேள்வி கேட்டுள்ளார்.
என்ன சொல்வதென்று தெரியாமல் ஜெயம் ரவி அப்படியே நிற்க ஐந்து பேரையும் பிடிக்கும் என சொல்லக்கூடாது என சிம்பு கூற அதற்கு சிறிது நேரம் சிரித்துக்கொண்டே ஜெயம் ரவி எனக்கு 5 ஹீரோயின்களையும் பிடிக்கும் ஐந்து பேரிடமும் ஒவ்வொரு திறமை இருக்கிறது பிறகு என்னுடைய கண்ணை பாருங்கள் நான் பொய் சொல்லவில்லை என சிரித்துக் கொண்டே ஜெயம் ரவி பேசியுள்ளார்.
அந்த வீடியோ தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது இவ்வாறு இரண்டு முன்னணி நடிகைகள் முந்தைய காலங்களில் எவ்வளவு ஒன்றாக சந்தோஷமாக இருந்துள்ளார்கள் என அனைவரையும் வியப்பில் வாழ்த்தி ஆழ்த்தி உள்ளது. இப்படிப்பட்ட நண்பர்கள் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதால் தற்பொழுது எல்லாம் இவர்களைப் பற்றிய தகவல் எதுவுமே வெளி வருவதில்லை. இதோ அந்த வீடியோ.
தற்பொழுது ஜெயம் ரவி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாக இருக்கிறது . இந்த திரைப்படத்தின் ரிலீஸ்காக மிகவும் ஆவலாக ரசிகர்கள் காத்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் படபிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த திரைப்படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.
Rare video of @SilambarasanTR_ ragging @actor_jayamravi 😂🔥😁pic.twitter.com/trWLSONnDO
— KARTHIK DP (@dp_karthik) September 8, 2022