தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெயம் ரவி தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை நடித்து வரும் நிலையில் அவருடைய நடிப்பில் வெளிவரும் பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்கின்றது. மேலும் ரசிகர்கள் விரும்பும் வகையில் தொடர்ந்து திரைப்படங்களின் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இப்படிபட்ட நிலையில் ஜெயம் ரவி அவர்களின் நடிப்பில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகத்தில் ராஜராஜ சோழனாக அறிவிக்கப்பட்ட அருண்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். இவரின் நடையும், பாவணையும் சோழ இளவரசர்களை கண் முன் நிறுத்தியது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்த பொழுது இணையதளத்தில் பலரும் அந்த கதாபாத்திரத்திற்கு இவர் பொருந்துவார் என பல கேள்விகளை எழுப்பி வந்தனர் ஆனால் அனைவருக்கும் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் பதில் அளித்துள்ளார் ஜெயம் ரவி.
இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகுவதற்கு முன்பாக பேட்டி ஒன்றில் ஜெயம் ரவி தன்னிடம் கூறிய ஒரு தகவலைப்பற்றி சியான் விக்ரம் மிகவும் நகைச்சுவையாக கூறியுள்ளார். அதாவது அவர் கூறுகையில் ஒரு நாள் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்த பொழுது ஜெயம் ரவி ஒரு நடிகர் காதல் காட்சியாக இருந்தாலும் சரி, சென்டிமென்ட் காட்சியாக இருந்தாலும் சரி, ஆக்சன் காட்சியாக இருந்தாலும் சரி, எல்லா காட்சிகளுக்கும் ஒரே மாதிரி ரியாக்ஷன் கொடுக்கிறாரே எப்படிங்க என குறிப்பிட்ட நடிகர் ஒருவரின் பெயரை சொல்லி கேட்டிருக்கிறார்.
அதற்கு விக்ரம் அவரை எனக்கு நன்றாக தெரியும்.. அவர் என் நண்பர் தான் என கூறினாராம் உடனே ஜெயம்ரவி அதான் எப்படிங்க என கேட்டுள்ளார். இவ்வாறு இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பிறகு இணையதள வாசிகள் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை குறித்து தான் ஜெயம்ரவி இவ்வாறு கேட்டுள்ளார் என கூறி வருகிறார்கள்.