இனிமே தான் சம்பவமே..கண் பார்வையாலேயே மிரட்டும் ஜெயம் ரவி.. வெளிவந்த சைரன் “டீசர்”

Siren
Siren

Jayam Ravi “Siren” Movie teaser : திரை உலகில் ஒரு நடிகர் இரண்டு, மூன்று வெற்றி படங்கள் கொடுத்து விட்டாலே ஓவராக துள்ளுவார்கள் மேலும் தலைகால் புரியாமல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்வார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் ஜெயம் ரவி. இவர் 20 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் நடித்து வருகிறார்.

ஆனால் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களுமே வித்தியாசமாக இருக்கும் அதனால என்னவோ இவருடைய படங்கள் பெரிதும் வெற்றி பெற்று என கடைசியாக கூட இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 1,2 படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து கைவசம் இறைவன், siren போன்ற படங்கள் இருக்கின்றன.

இந்த நிலையில் ஜெயம் ரவியின் 43 பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளிவருவதோடு அவரைப் பற்றிய தகவல்களும் வெளியே கசிகின்றன. ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு சுமார் 73 கோடியில் இருந்து 75 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் ஒரு விளம்பரப் படத்தில் அவர் நடிகர் 2.5 முதல் 5 கோடி வரை வாங்குவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள “சைரன்” படத்தின் டீசர் வெளியாகி உள்ளது ஜெயம் ரவி உடன் இணைந்து யோகி பாபு, சமுத்திரகனி, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இன்று ஜெயம் ரவி 43-வது பிறந்த நாளை முன்னிட்டு டீசர் வெளியாகி உள்ளது இதில் ஜெயம் ரவி ஒரு வயதான தோற்றத்தில் மிரட்டி உள்ளார் மேலும் அவர் சிறையிலேயே ஒர்க் அவுட் செய்வது போலவும் காண்பிக்கப்பட்டுள்ளது இதையெல்லாம் வைத்து பார்க்கையில் படம் திரில்லர் மற்றும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ நீங்களே பாருங்கள்..