ஒரே வார்த்தையில் உலக அழகி ஐஸ்வர்யா ராயை வெட்கப்பட வைத்த ஜெயம் ரவி.! அப்படி என்ன சொன்னார் பாருங்க..

jeyamravi
jeyamravi

பிரம்மாண்ட இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை கண்டது. இவ்வாறு இந்த முதல் பாகத்தினை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

அந்த வகையில் மொத்த படப்பிடிப்பும் முடிந்திருக்கும் நிலையில் சில வாரங்களாக பட குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபித்த துளி பாலா, ஐஸ்வர்யா ராய், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து படக்குழு அடிக்கடி படத்தின் அப்டேட்டுகளை வெளியிட்டு வருவதினை வழக்கமாக வைத்திருக்கிறது. அப்படி அந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.

இவ்வாறு பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்சாக இன்னும் சில தினங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் முதல் பாகத்தை விட இந்த பாகம் மேலும் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியனை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் ஜெயம் ரவி ஐஸ்வர்யா ராயை வெட்கப்பட வைத்திருக்கும் நிலையில் அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது சமீபத்தில் பிரமோஷனில் கலந்துக்கொண்ட ஜெயம் ரவி எனக்கு முழுசா தெலுங்கு தெரியாது பாதி தெலுங்கு பாதி தமிழ் தான் தெரியும் இருந்தாலும் 100% நான் ஐஸ்வர்யா ராய் ஃபேன் எனக் கூற அரங்கமே ஓசை எழுகிறது. உடனே ஐஸ்வர்யா ராய் நெத்தியில் கையை வைத்துக்கொண்டு கீழே குனிந்து வெக்கப்படுகிறார் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக இதனை பார்த்து ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய் செம க்யூட் எனக் கூறி வருகின்றனர்.