அழகு மனைவியை விவாகரத்து செய்த ஜெயம் ரவி.. முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்களுக்கு ரசிகர்கள் இருப்பார்கள் அதேபோல் அந்த நடிகர்களை பிடிக்காதவர்களும் இருப்பார்கள். அந்த வகையில் ஜெயம் ரவி நடிகரை அனைவருக்கும் பிடிக்கும்.

ஜெயம் ரவி முதன் முறையாக ஜெயம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது இதனைத் தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்த திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது கடைசியாக ஜெயம் ரவி சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்பொழுது இவர் கைவசம் அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை ஆகிய திரைப்படங்கள் கையில் இருக்கின்றன.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு தற்பொழுது இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் மூத்த மகனை டிக் டிக் டிக் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்திருந்தார்.

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இருவரும் அன்னியோன்யமாக இருந்தார்கள் ஆனால் திடீரென யார் கண்ணுபட்டதோ தெரியவில்லை ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார்.

தன் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாள் அவருக்கு பிறந்தநாள் அதாவது 44வது பிறந்த நாளை தற்பொழுது கொண்டாடுகிறார் இவரின் சொத்து விவரம் தற்போது தெரியவந்துள்ளது ஒரு படத்திற்கு மூன்று கோடி வரை சம்பளமாக வாங்கும் ஜெயம் ரவி 75 முதல் 80 கோடி வரை இவரின் சொத்து மதிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.