ஜெயம் ரவி இன்று தன்னுடைய 44 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆனால் அவருடைய ரசிகர்கள் அந்த மகிழ்ச்சியான மனநிலையில் இல்லை. ஏன் ஜெயம் ரவியே கூட அப்படிப்பட்ட நிலையில் தான் இருப்பார். இதற்கு முக்கிய காரணம் நேற்று அவர் தன்னுடைய விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது தான்.
யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த செய்தி தற்போது மீடியாவில் பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் இவருடைய விவாகரத்துக்கு காரணம் என்ன என பலரும் அலசி ஆராய்ந்து கதை சொல்லி வருகின்றனர்.
மறுபக்கம் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு பிரதர் பட குழு ஒரு க்லிம்ஸ் வீடியோவை வெளியிட்டு டீசர் ஆடியோ லான்ச் எப்போது என அறிவித்துள்ளது. அதேபோல் ஜீனி படத்தை தயாரித்து வரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஜெயம் ரவி ரோமியோ போல் கையில் சிவப்பு ரோஜாவுடன் ஸ்டைலான லுக்கில் இருக்கிறார். மாயாஜாலம் நிறைந்த இந்த கதையில் அவர் பூதமாக நடிக்கிறார். ஆனால் அந்த பூதமே காதல் செய்தால் எப்படி இருக்கும் என்பது போல் இருக்கிறது இந்த போஸ்டர்.
மேலும் அதில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி செட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் இருக்கின்றனர். இப்படி கலர்ஃபுல்லாக வெளிவந்திருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரல் செய்து வருகின்றனர்.
விவாகரத்து வருத்தமாக இருந்தாலும் கூட இன்றிலிருந்து ஜெயம் ரவி புது தொடக்கத்திற்கு தயாராகிவிட்டார். இனி எப்போதுமே அவர் வாழ்வில் வெற்றி தான் இருக்கும் என ரசிகர்கள் ஆறுதலையும் வாழ்த்துக்களையும் ஒரு சேர கூறி வருகின்றனர்.