பொதுவாக ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்துமே நல்ல வெற்றித் திரைப்படமாக அமைவது வழக்கம் தான் அந்த வகையில் தன்னுடைய அசத்தலான நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவ்வாறு நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தில் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது மட்டுமல்லாமல் கதாபாத்திரத்துக்கு தகுந்தவாறு தன்னையே மாற்றிக்கொள்வார்.அப்படி நடித்த மெகா ஹிட்டடித்த திரைப்படங்கள்தான் பேராண்மை வனமகன் பூலோகம்.
இவ்வாறு வெளிவந்த இந்த மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. இந்நிலையில் ஜெயம் ரவி அவர்கள் கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில் பூலோகம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி கிடைக்காவிட்டாலும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வண்ணமாக இத்திரைப்படம் அமைந்தது.
இந்நிலையில் மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி வைக்க போவதாக இணையத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படமானது ஈழத்தமிழர்களுக்காக போராடும் ஒரு கேங்க்ஸ்டர் திரைப்படமாகும்
அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களும் ஈழத்தமிழர்களை அடிப்படையாக வைத்து வெளிவந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் கூட சமந்தா நடித்த வெப் தொடர் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்து இந்நிலையில் ஜெயம் ரவி நடிக்க இருக்கும் இந்த திரைப்படத்தின் மீதும் எதிர்ப்புகள் கட்டாயம் வரும் என பலரும் கூறி வருகிறார்கள்.
ஏற்கனவே இவருடைய இயக்கத்தில் பூலோகம் என்ற திரைப்படத்தில் நடித்த ஜெயம் ரவி பெரும் தோல்வியை சந்தித்துள்ளார் இன் நிலைகள் மறுபடியும் இவருடைய கூட்டணி என்பதன் காரணமாக ரசிகர்கள் அச்சத்தில் இருப்பது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் எகிரி கிடைக்கின்றது.