சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு குழந்தைகள் தற்போது நடிகையாக வளம் வருகிறார்கள். பெரும்பாலும் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனைவரும் பிரபலம் ஆகி விடுவதில்லை ஆனால் ஒரு சில குழந்தைகள் தான் மிகவும் பிரபலம் அடைந்து விடுவார்கள். அதிலும் சினிமாவில் பல்வேறு நட்சத்திரங்கள் திருமணம் செய்து கொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் அஜித் ஷாலினி, சூர்யா ஜோதிகா, பிரசன்னா சினேகா, பாபி சிம்ஹா நடிகை ரேஷ்மி மேனன் என பலரை கூறிக்கொண்டே செல்லலாம். சினிமாவில் நட்சத்திர நடிகர் என்றால் அவர்களில் ஒருவர் பாபி சிம்கா என்பவரும் ஒருவர். இவர் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மிரட்டியுள்ளார். பாபி சிம்ஹா முதன்முதலில் 2012ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து பீட்சா, சூதுகவ்வும் என பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பிறகு ஜிகர்தண்டா என்ற திரைப்படத்தின் மூலம் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்தார். அதேபோல் 2014ஆம் ஆண்டு பாபி சிம்ஹா சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். பாபி சிம்ஹா ரேஷ்மி மேனன் என்பவரை தான் திருமணம் செய்து கொண்டார். இவர் வேறு யாரும் கிடையாது 2002ஆம் ஆண்டு வெளியாகிய ஆல்பம் என்ற திரைப்படத்தில் ஸ்ருதியின் தங்கையாக நடித்திருந்தார்.
அதேபோல் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய ஜெயம் திரைப்படத்தில் சிறுவயது சதாவாக நடித்தவர் அதன்பிறகு ரேஷ்மிமேனன் 2010ஆம் ஆண்டு இனிது இனிது என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் நடித்தது மூலம் பல ரசிகர்களை கவர்ந்தார் அதனால் பல படவாய்ப்புகளும் இவருக்கு அமைந்தது.
பிறகு பாபி சிம்ஹா அவர்களுடன் உறுதி என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது காதலிக்க ஆரம்பித்தார்கள் பிறகு 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார் தற்போது இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கிறார் அவரின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.